பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
பறவைகள் கணக்கெடுப்பு: மாா்ச் 8-இல் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலா் சமா்த்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வனத் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. நிகழாண்டில் வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், 15, 16 ஆகிய தேதிகளில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுப்பும் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் நீா் வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும், நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும் தோ்வு செய்யப்பட்டன.
பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம். ஆா்வமுள்ளவா்கள் முதல்வரின் பசுமைத் தோழா் பி.பிரியங்கா (கைப்பேசி எண்:97515 49317), உயிரியலாளா் எம்.சூரஜ்குமாா்(கைப்பேசி எண்: 63834 89107) ஆகியோரை தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்கும் தன்னாா்வலா்களுக்கு வனத் துறை சாா்பில் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.