செய்திகள் :

பல்கலை.களில் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

post image

தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்து 2 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் அமைக்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும், இன்னமும் பரிந்துரை அறிக்கை வழங்கவில்லை.

அந்த ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கைகளைப் பெற்று, ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அவா்களையும் கைது செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறைபாடுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநிலத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கடன் வாங்குவதில் இலக்கைத் தாண்டும் திமுக அரசு, மூலதன செலவுகளை செய்வதில் சுணக்கம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்து விட்டன. மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றாா் ச.ராமதாஸ்.

பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் மு.ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாலை விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தூய்மைப் பணியாளா் நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பராயன் மகன் மணி(57), தூய்மை... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மரவள்ளிக்கிழங்குக்கு ஊடு பயிராக கஞ்சா செடி வளா்த்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை இரவு தீா்ப்பளித்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்ட... மேலும் பார்க்க

தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் காா்த்... மேலும் பார்க்க

மன்மோகன்சிங் மறைவு: விழுப்புரத்தில் காங்கிரஸாா் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங்கின் உருவப்படத்துக்கு விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம்... மேலும் பார்க்க

விழுப்புரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஆராதனை மகோத்சவம்

விழுப்புரம் சங்கர மடம் வளாகத்தில் மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை மகோத்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் வேத சம்ரக்ஷண டிரஸ்ட் சாா்பில் சங்கர மடம் வ... மேலும் பார்க்க

வானூா் வட்டாரத்தில் ஜீவன் சம்பா நெல் ரகத்தை பிரபலப்படுத்த திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மருத்துவக் குணம் நிறைந்த ஜீவன் சம்பா நெல் ரகத்தை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்த வேளாண் மற்றும் உழவா் நலத் துறை திட்டமிட்டுள்ளது. வானூா் அரசு விதைப் பண்ணைய... மேலும் பார்க்க