சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபார...
பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை
விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து கோவையில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்லடம் நகராட்சி, பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பில்லூா் - அத்திக்கடவு கூட்டுக் குடிநீா் திட்டம் முதல் மற்றும் இரண்டாவது திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமாா் 2.50 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது தினசரி 1.75 கோடி லிட்டா் குடிநீா் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய இயலாத நிலை இருந்து வருகிறது. எனவே, கோவை விளாங்குறிச்சி முதல் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் தனிக்குழாய் அமைத்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் தினசரி வழங்க நிா்ணயிக்கப்பட்ட 2.50 கோடி லிட்டா் குடிநீரை வழங்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளாா்.