செய்திகள் :

`பல பெண்களுடன் தொடர்பு; பெரும் சித்ரவதை, எனவேதான்...' - தாயுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் `பகீர்!'

post image

பெங்களூரு புறநகர் பகுதியான சிக்கவனபாரா என்ற இடத்தில் தனியாக நின்ற காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் லோக்நாத் சிங் (37) என்று தெரிய வந்தது. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி லோக்நாத் சிங்கின் மனைவி யஷ்வினி மற்றும் அவரது தாயார் ஹேமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யஷ்வினி

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சைதுல் கூறுகையில்,' 'லோக்நாத்தும் யஷ்வினியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களது திருமணத்திற்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தான் யஷ்வினியின் பெற்றோருக்கு அவரது திருமணம் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆனால் லோக்நாத்திற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது யஷ்வினிக்கு தெரிய வந்தது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர். அதோடு லோக்நாத் சில சட்டவிரோத தொழில்களையும் செய்து வந்தது யஷ்வினிக்கு தெரிய வந்தது.

லோக்நாத் தனது மனைவிக்கு போன் செய்து வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். லோக்நாத் தனது சகோதரியிடம் சொல்லிவிட்டு யஷ்வினி வீட்டிற்கு காரில் புறப்பட்டார். யஷ்வினியும், அவரது தாயாரும் சேர்ந்து வீட்டில் உணவு தயாரித்தனர். அதில் தூக்க மாத்திரையை கலந்தனர். லோக்நாத் வரும்போதே பீர் பாட்டில்களை அதிக அளவு வாங்கி வந்திருந்தார். அவர் தனது மனைவி யஷ்வினியை அழைத்துக்கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.

காரில் இருக்கும்போது லோக்நாத் அதிக அளவில் மது அருந்தி இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தூக்க மாத்திரை கலந்த சாப்பாட்டை அதிக அளவில் லோக்நாத் சாப்பிட கொடுத்துள்ளார் யஷ்வினி. அதனை சாப்பிட்ட உடன் லோக்நாத்திற்கு தூக்கம் வர ஆரம்பித்தது. உடனே யஷ்வினி தனது தாயாருக்கு இருவரும் இருக்கும் இடம் தொடர்பான தகவலை அனுப்பி இருக்கிறார். அவரது தாயார் ஹேமா கத்தியுடன் வந்தார். ஹேமா லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார். உடனே லோக்நாத் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க 150 மீட்டர் தூரத்திற்கு ஓடினார். அவர் தனது காருக்கு பின்புறம் மறைந்து கொள்ள முயன்றார். அவரை கத்தியால் குத்திய தாயும், மகளும் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் லோக்நாத் காரில் இறந்து கிடப்பதை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்'' என்றார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரித்தபோது, லோக்நாத் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து யஷ்வினி குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்தே யஷ்வினி அவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் யஷ்வினியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

தாயார் வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து அங்கு வந்து மிரட்டிக்கொண்டிருந்தார். தன்னுடன் வந்து வாழவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். அதன் பிறகுதான் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண லோக்நாத்தை கொலை செய்ய தாயும் மகளும் சேர்ந்து முடிவு செய்தது தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க

`ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்ட 10 பேருக்கு HIV பாதிப்பு' - கேரளாவில் அதிர்ச்சி!

கேரள எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி கடந்த இரண்டு மாதங்களாக சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.மலப்புறத்தில் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்ட 10 பேருக்... மேலும் பார்க்க

கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சரடி மெத்து பெருமாள்பள்ளத்தைத் சேர்ந்தவர் சிவராஜன் (58). இவர் அதேபகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார். இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினர் மதுரை அழகர்கோயி... மேலும் பார்க்க