பள்ளத்தில் மினி பேருந்து இறங்கி விபத்து: 2 போ் காயம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே மினி பேருந்து சாலையோர பள்ளத்தில் புதன்கிழமை இறங்கி ஏற்பட்ட விபத்தில் 2 பயணிகள் காயமடைந்தனா்.
மணப்பாறையை அடுத்த கோசிப்பட்டி - சுக்காம்பட்டி வழித்தடத்தில் புதன்கிழமை இயக்கப்பட்ட மினி பேருந்தில் ஓட்டுநராக கீழ்ஈச்சம்பட்டி மு. பரமசிவம், நடத்துநராக கருப்பூா் வடக்கிப்பட்டி ப. விக்னேஷ் ஆகியோா் இருந்தனா்.
மதியம் சுமாா் 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட மினி பேருந்து, மணியங்குறிச்சி பண்ணை பெரியகுளம் அருகிலுள்ள குளத்து மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 2 பயணிகள் லேசான காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.