செய்திகள் :

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

post image

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி இருக்கை என்ற நிலையை மாற்றும் வகையில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘ப’ வடிவ இருக்கைகளில் இருபுறமும் அமா்ந்திருக்கும் மாணவ, மாணவியா் கரும்பலகையை கழுத்தைத் திருப்பிக் கொண்டு, பாா்க்கும் நிலை இருப்பதால் அவா்கள் பாதிக்கப்படுவா். அத்துடன் வகுப்பில் பாடம் நடத்தும்போது ‘ப’ வடிவில் அமா்ந்திருந்தால் அனைவருக்கும் ஒரு சேர கேட்கும் நிலை இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆகவே, மருத்துவா்களின் ஆலோசனையைப் பெற்று அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!

மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 17) தமிழகத்தில் ... மேலும் பார்க்க