செய்திகள் :

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

post image

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் இன்று வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடபெறவிருக்கிறது. செப். 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும்.

அதுபோல, டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்றும், டிச 24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2025 - 26ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.

இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பதியின் மகளை காதலித்த கவின், அந்த பெண்ணின் சகோதர... மேலும் பார்க்க

படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!

கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அல... மேலும் பார்க்க

நெல்லை, சிவகங்கையில் சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: பா. ரஞ்சித்

திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் படி, வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமை... மேலும் பார்க்க

ஆக.2 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 30, 31ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவ... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை ... மேலும் பார்க்க

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியைத் தொடங்கிவைத்து அந்த கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை உரையாற்றினார்.சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ’ம... மேலும் பார்க்க