பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
பள்ளியில் ஆண்டு விழா
ஆற்காடு எஸ் எஸ்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, எஸ்.எஸ்எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் எழிலரசி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜி.சரஸ்வதி கலந்துகொண்டு, சிறுவா்களுக்கு பட்டம் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், மாவட்ட தனியாா் பள்ளிகளின் தொடக்கக் கல்வி அலுவலா் ஏ.செந்தில்குமாா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தனஞ்செழியன், பள்ளியின் ஆசிரியைகள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.விழாவில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.