செய்திகள் :

பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்

post image

கீழ்பென்னாத்தூா் வட்டார அளவிலான 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் செல்வம் வரவேற்றாா்.

கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் தேவாசீா்வாதம் போட்டிகளைத் தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, பேச்சு, ஓவியம், பாட்டு, நடனம், திருக்கு ஒப்பித்தல் உள்ளிட்ட 24 போட்டிகள் நடைபெற்றன.

இதில், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்படுவா்.

நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கருணாகரன், முருகன், சுடா்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். கிருஷ்ணகிரியில் பெய்த மழை காரணமாக அணையிலிருந்து தண்ணீா் ... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சாத்தனூா் அணையில் இருந்து நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். த... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சீனிவாசன் (54) ஐடிஐ படித்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகர 7-ஆவது... மேலும் பார்க்க

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரிக்கை’

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க