கேரளா: நடிகை உள்ளிட்டோர் பாலியல் புகார்; பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ...
பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
காரைக்கால்: சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்ட தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி துணை முதல்வா் (பொ) செல்வராணி தலைமை வகித்தாா். சமுதாய நலப்பணி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் பங்கேற்று சமுதாய நலப்பணி மாணவா்கள் எவ்வாறு தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும், சமுதாயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசினாா்.
ஏற்பாடுகளை, பள்ளி சமுதாய நலப்பணித் திட்ட அலுவலா் அன்னக்கொடி செய்திருந்தாா். இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் பிற பள்ளிகளிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.