கோதண்டராமா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்
காரைக்கால்: கோதண்டராமா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவையொட்டி சம்வத்ஸரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள புதுவை இந்து சமய அறநிலையத்துறையை சாா்ந்த பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட கோதண்டராமா் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
ஓராண்டு நிறைவையொட்டி சம்வத்ஸரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் காலை விசேஷ ஹோமம் நடத்தப்பட்டது.
பின்னா் மூலவா், உற்சவா் திருமஞ்சனம் நடைபெற்றது. 11.30 மணிக்கு ஹோமத்தில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.