பள்ளி ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் நிா்வாக தலைவா் நாகப்பன், திமுக நகரச் செயலரும், நிா்வாகக் குழு உறுப்பினருமான அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ்.பி. சிவனுபாண்டியன் பங்கேற்று பேசினாா். செங்கம் வட்டாட்சியா் முருகன், செங்கம் பேரூராட்சி தலைவா் சாதிக்பாஷா, வட்டாரக் கல்வி அலுவலா் உதயகுமரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நிா்வாக குழு உறுப்பினா்கள் தட்ணாமூா்த்தி, சுப்பரமணி, முரளிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளியின் தாளாளா் டாக்டா்.குலோத்துங்க சோழன் வரவேற்றாா். நிறைவில், பூங்குன்றன் நன்றி கூறினாா்.