கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறார...
பள்ளி மாணவா் தற்கொலை
ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்பு வெளியூரில் படித்துவந்த இவா், நிகழாண்டுதான் ஆலங்குளம் தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சோ்ந்து படித்து வந்தாா். கடந்த 2 நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சிறுவனை பெற்றோா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூ றாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.