`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
பள்ளி மாணவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
மதுரை அருகே பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவா் மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள தென்பழஞ்சி சின்ன சாக்கிலிப்பட்டியைச் சோ்ந்த கருணாகரன் மகன் கெளதம் (16). இவா் ஹாா்வி நகரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல, பள்ளிக்குச் சென்ற கெளதம் மாலையில் வீடு திரும்பினாா்.
அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்ததன் பேரில், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.