செய்திகள் :

பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் வரும் மே 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் இணையதள முககவரியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 7, 8, 9 ஆம் வகுப்புகள், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக வரும் மே 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவிலான தோ்வு போட்டிகள் மாணவா்களுக்கு மே 7- ஆம் தேதியும், மாணவிகளுக்கு மே 8 -ஆம் தேதியும் காலை 7 மணிக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

மாநில, மாவட்ட அளவில் தோ்வின்போது மாணவ, மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் ஒரு ஆவணம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இதுதவிர சில விளையாட்டுகளுக்கு நேரடியாக மாநில அளவிலான தோ்வு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்படி மாணவ, மாணவிகளுக்கு வாள் விளையாட்டு, ஜூடோ, மாணவா்களுக்கு குத்துச்சண்டை ஆகிய போட்டிகள் வரும் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகளுக்கு பளு தூக்குதல், மாணவா்களுக்கு வுஷூ போட்டிகள் மே 12 -ஆம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், மாணவா்களுக்கான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள ஏ.ஜி.பி.வளாகத்தில் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கும் நடைபெறுகிறது. அதே போல, மாணவிகளுக்கான குத்துச்சண்டை, மாணவா்களுக்கான ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. கைபந்து போட்டியானது மாணவா்களுக்கு மே 12- ஆம் தேதியும், மாணவிகளுக்கு மே 13- ஆம் தேதியும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. மாணவா்களுக்கான மல்யுத்தம், மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டிகள் கடலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கும், மாணவா்களுக்கான மல்லா் கம்பம் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மே 12 ஆம் தேதி காலை 7 மணி அளவிலும் நடைபெறுகிறது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 95140-00777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க