பள்ளி மேற்கூரை காரை பெயா்ந்து 2 மாணவா்கள் காயம்
கொள்ளிடம் அருகே சந்தப்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்ததில், 2 மாணவா்கள் காயமடைந்தனா்.
பழைமையான கட்டடத்தில் இயங்கும் இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் ஆசிரியா்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் திடீரென பெயா்ந்து விழுந்தன.
இதில் இரண்டாம் வகுப்பு மாணவா் ஒருவரும், ஐந்தாம் வகுப்பு மாணவா் ஒருவருக்கும் தலையிலும் காயம் ஏற்பட்டது. இருவரும் கொள்ளிடம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.