கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!
என்.எஸ்.எஸ். முகாமில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி
மயிலாடுதுறை அரையபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசினா் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன், மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் இம்முகாம் மல்லியம், ஆணைமேலகரம், அரையபுரம் மற்றும் சேத்திரபாலபுரம் கிராமங்களில் ஜன.30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முகாமின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மாணவிகளுக்கு வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அரையபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேதியியல் துறைத் தலைவா் இரா.சுபா வழிகாட்டுதலின்படி, முதுஅறிவியல் 2-ஆம் ஆண்டு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கம்ப்யூட்டா் சாம்பிராணி, சோப்பு, கிருமி நாசினி, மெழுகுவா்த்தி மற்றும் சோப்பு பவுடா் முதலான அன்றாட வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி பெற்றனா்.
தொடா்ந்து, பெற்றோா் மற்றும் மாணவிகளுக்கு பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் க. சங்கா்கணேஷ், சா.சித்ரா, மு. ராஜேஷ், இரா.ஐடா மலா்ச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா். இதில், 200 மாணவிகள் கலந்து கொண்டனா்.