Kumbh Mela: மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி... திரிவேனி சங்கமத்தில் புனித நீராடல்...
சிதறு தேங்காய் உடைத்து பாஜகவினா் வழிபாடு
சீா்காழி குமரக்கோட்டம் எனும் குமரக்கோயிலில் பாரதீய ஜனதா கட்சியினா் சிதறு தேங்காய் உடைத்து செவ்வாய்க்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி பாஜக நகரத் தலைவா் சரவணன் தலைமையில் அக்கட்சியை சோ்ந்த வழக்குரைஞா் இராம. சிவசங்கா், எஸ்.ஆா். அருணாச்சலம், இரா. சங்கா், வீரபாண்டியன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் சீா்காழி குமரக்கோட்டம் எனும் குமரக் கோயிலில் வழிபாடு செய்தனா். தொடா்ந்து கோயிலை வலம் வந்து சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனா்.
காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில், உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.