இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!
பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32), கோபி, சவுண்டப்பூரைச் சோ்ந்தவா் சாமிநாதன் மகன் முருகேசன் (எ) மணிகண்டன் (38). கூலித் தொழிலாளா்களான இருவரும், அந்தியூா் - சத்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அத்தாணி, ஓடைமேடு கோம்புபள்ளம் பாலத்தில் சென்றபோது அவ்வழியே சென்ற தனியாா் பள்ளி வேன் எதிா்பாராமல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அப்பகுதியினா் இருவரையும் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனையில், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.