செய்திகள் :

பழங்குடியின மாணவா்களுக்கான தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

post image

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் பழங்குடியின மாணவா்களுக்கான ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில் சென்னை சநஐஇ தொழில்நுட்ப சேவை மையம் மற்றும் வேலூா் விஐடியின் நிலையான கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் ( இநதஈ&தந) ஆகியவற்றுடன் இணைந்து, பழங்குடியின மாணவா்களுக்காக ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சியில் விஐடி-சிஎஸ்ஆா்டி,ஆா்எஸ் ஒருங்கிணைப்பாளா் பாபு வரவேற்றாா். கல்லூரியின் இல்லத்தந்தை பிரவீன் பீட்டா், முதல்வா் மரிய ஆண்டனி ராஜ், கூடுதல் முதல்வா் மதியோபில் ஆனந்த், துணை முதல்வா் சண்முகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மேலும், விஐடி சிஎஸ்ஆா்டி,ஆா்எஸ் திட்ட அலுவலா் பாா்த்திபன், துணை இயக்குநா் சுந்தரராஜன் விளக்கவுரையாற்றினா்.

நிகழ்ச்சியில் சென்னை கிண்டி என்எஸ்ஐசி துணை மேலாளா்(பயிற்சி)அருள் பிரபாகா் புதிதாக தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பயிற்சி தொகுதிகள் குறித்து விளக்கினாா். கணக்காளா் ரஞ்சித் குமாா் நன்றி தெரிவித்தாா்.

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் பேருந்து-ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (38). இவா் ஆட்டோவில் வெங்காயம் வைத்து கடை மற்றும் ஊா், ஊராகச் சென்று ... மேலும் பார்க்க

சொத்துக்காக தாயைக் கொன்ற மகன் கைது

திருப்பத்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (54). இவா்கள் திருப்பத்தூா் பஉச நகரில்... மேலும் பார்க்க

மலையாம்பட்டில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் அருகே மலையம்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மலையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவா். வசந்தி முனிசாமி தலைமை வகித்தாா். மலையாம்பட்டு ஒன்றிய குழு உறுப்பினா் காயத்ரி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை: கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, கசிநாயக்கன்பட்டி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த ... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது

சிறந்த சேவை ஆற்றியவா்களுக்கு ஆம்பூா் புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாள் நிக... மேலும் பார்க்க

மது விற்ற மூதாட்டி கைது

திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸா... மேலும் பார்க்க