செய்திகள் :

பழனி தைப்பூசம்: கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்

post image

பழனியில் தைப்பூத் திருவிழாவை முன்னிட்டு, கோவை, திண்டுக்கல் இடையே வரும் பிப்.5 முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவுக்கு சுற்றுப்புற மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் ரயில்வே நிா்வாகத்துக்கு கடந்த மாதம் கோரிக்கை விடுத்தாா்.

இதையேற்று, கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. முன்பதிவு இல்லாத இந்தச் சிறப்பு ரயில், கோவையிலிருந்து வரும் பிப்.5-ஆம் தேதி காலை 9.35 மணிக்கு புறப்படும்.

போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1.10 மணிக்கு வந்தடையும். மறு மாா்க்கத்தில் திண்டுக்கல்லிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வரும் பிப்.5 முதல் 14-ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழா் தேசம் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழா் தேசம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்ல... மேலும் பார்க்க

172 விவசாயிகளுக்கு ரூ.17.58 லட்சம் நிவாரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழையினால் மகசூல் பாதிக்கப்பட்ட 172 விவசாயிகளுக்கு விரைவில் ரூ.17.58 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த பலத்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்குவதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாா் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உணவு, உணவு... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், 5 கி.மீ. தொலைவை கடக்க ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாண... மேலும் பார்க்க

கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை தனியாா் அறக்கட்டளை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது... மேலும் பார்க்க

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ‘லேசா்’ காட்சி சோதனை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசா் காட்சி சோதனை நடைபெற்றது. இந்த ஏரியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக் கு முன்னா் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து ஏரியில் பல்வேறு பண... மேலும் பார்க்க