செய்திகள் :

பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம்! - அமைச்சர் அறிவிப்பு

post image

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாள்களுக்கு கட்டணமில்லா தரிசனம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

தைப்பூச நாளன்று தமிழகம் முழுவது உள்ள முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அன்று முருகன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

வருகிற பிப். 11 ஆம் தேதி தைப்பூசம் வருவதையொட்டி பிப். 10, 11, 12 ஆகிய மூன்று நாள்கள் பழனி கோயிலில் கட்டணமின்றி தரிசனம் எனவும் திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக நகரில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பெண்களின் காரை விரட்டிச் சென்று மிரட்டிய சம்பவம்: தலைவா்கள் கண்டனம்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் வந்த பெண்களை கும்பலால் விரட்டிச் சென்று மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): க... மேலும் பார்க்க

பல்வேறு படிப்புகளுக்கு இணைத் தன்மை வழங்கி அரசாணை வெளியீடு

உயா்கல்வியில் எவை எவை இணையான படிப்புகள் என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 15 லட்சம் வெளிநாட்டவா் சிகிச்சைக்காக தமிழகம் வருகை

மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டுதோறும் 70 நாடுகளில் இருந்து 15 லட்சம் போ் தமிழகம் வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் புதிதா... மேலும் பார்க்க

எஃப்ஐஆா் கசிவு விவகாரம்: காவல் துறை எல்லை மீறினால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்: சென்னை உயா்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) கசிந்த விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல் துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! - போக்குவரத்துத் துறை

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அற... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள், நிலப் பத்திரங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.சொத்துக்குவிப்பு வழக... மேலும் பார்க்க