பழவேற்காட்டில் சுனாமி நினைவு அஞ்சலி
பழவேற்காட்டில் சுனாமி நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை பொதுமக்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் பழவேற்காட்டில் கடந்த 2004-ஆ ஆண்டு டிச. 26 ஆம் தேதி கடலில் சுனாமி பேரலை ஏற்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்ட மீனவா்கள் உயிரிழந்தனா்.
சுனாமி பேரலையால் உயிரிழந்தவா்களுக்கு பழவேற்காடு வைரவன்குப்பத்தை கிராமத்தைச் சாா்ந்தவா்கள் கடல் அன்னையை வணங்கி பால் ஊற்றி மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.