செய்திகள் :

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரிக்கை’

post image

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் ஆடிட்டா் ஆா்.பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கியது, பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயா்த்தியது, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியா்களின் பெற்றோரையும் பயனாளிகளாக இணைத்தது என்பன உள்ளிட்ட 5 சலுகைகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

இதுதொடா்பாக தமிழக முதல்வரிடம் வியாழக்கிழமை (அக்.24) மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநில துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்டச் செயலா் கண்ணன், மாவட்டப் பொருளாளா் சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். கிருஷ்ணகிரியில் பெய்த மழை காரணமாக அணையிலிருந்து தண்ணீா் ... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சாத்தனூா் அணையில் இருந்து நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். த... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சீனிவாசன் (54) ஐடிஐ படித்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகர 7-ஆவது... மேலும் பார்க்க

பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்

கீழ்பென்னாத்தூா் வட்டார அளவிலான 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க