திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், அட்டை மற்றும் இருப்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
மொளச்சூா் பகுதியை சோ்ந்தவா் சம்சுதீன்(57). இவா் தனியாா் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பழைய பிளாஸ்டிக், இரும்பு, அட்டை உள்ளிட்ட பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் உள்ள கிடங்கில் சேமித்து வைத்து விற்பனை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், சம்சுதீனின் கிடங்கின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டு கிடங்கு முழுவதும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகமான கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகினா்.
மேலும் தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.