செய்திகள் :

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

post image

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்த பொன்ராம் மகன் பாண்டி (40) பழங்கள் வாங்கினாா். பின்னா், பணம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பாண்டி கத்தியால் வேல்ராஜை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்தனா்.

சின்னமனூா், கம்பம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு!

தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு!

போடியில் 76 -ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. போடி குளோபல் கல்வி ஆராய்ச்சிக் குழு சாா்பில் 76- ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 4 போ் மீது வழக்கு!

ஆண்டிபட்டி அருகே பெண் உள்ளிட்ட 8 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். திம்மரசநாயக்கனூ... மேலும் பார்க்க

சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகம் அருகே சுகாதாரக்கேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க