செய்திகள் :

பவன் கல்யாண் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி (தே கால் ஹிம் ஓஜி) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

அரசியலில் தீவிரம் காட்டி வந்ததால், நீண்ட நாள்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் பங்கேற்று படத்தை முடித்துக்கொடுத்தார்.

படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, செப். 25ஆம் தேதி ஓஜி திரைப்படம் வெளியாகவுள்ளது.

பவன் கல்யாண் பட வெளியீட்டுத் தேதி

கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகிவரும் இப்படத்தில், பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சாஹோ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சுஜீத் இயக்கியுள்ளார்.

ஓஜி படத்தில், ஓஜாஸ் கம்பீரா என்ற பாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யாணின் அரசியல் ஈடுபாட்டினால் ஒத்திவைக்கப்பட்டது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

இதற்கு முன்பு, ஹரி ஹர வீரமல்லு என்ற பவன் கல்யாணின் மற்றொரு புதிய படம் ஜுன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சிவகார்த்திகேயன் செய்த செயல்... பைரி நாயகன் நெகிழ்ச்சி!

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நா... மேலும் பார்க்க

நான் இதற்கு பொருத்தமானவன் இல்லை: மணிரத்னம்

கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இயக்குநர் மணிரத்னம் பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிற... மேலும் பார்க்க

மெட்ராஸ் மேட்னி டிரைலர்!

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் ... மேலும் பார்க்க

அத்தியாயம் முடிந்தது..! ரொனால்டோவின் பதிவினால் ரசிகர்கள் சோகம்!

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி புரோ லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நசீர் அணி அ... மேலும் பார்க்க

பிரேசிலுக்கு புதிய பயிற்சியாளரான கார்லோ அன்செலாட்டி..! ஆண்டனி உள்ளே, நெய்மர் வெளியே!

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான புதிய பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரேசில் அணியின் சமீபத்திய ஃபார்ம் கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஆர்ஜென்டீனாவுடன் 4-1 என பிரேசில் தோல்வியுற்றது. இதனைத் ... மேலும் பார்க்க

கண்ணப்பா விஎஃப்எக்ஸ் காட்சிகள் திருட்டு?

கண்ணப்பா திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, அக்... மேலும் பார்க்க