கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கண்ணப்பா விஎஃப்எக்ஸ் காட்சிகள் திருட்டு?
கண்ணப்பா திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, அக்ஷய் குமார், மோகன் பாபு, சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவ பக்தர் கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முக்கியமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை (hard disk) தயாரிப்பு நிறுவனப் பணியாளர் திருடிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளாராம். இதனால், இப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வேண்டாம்... அமீர் கானின் தைரிய முயற்சி!