சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!
சங்கர் மகாதேவன் இசையில் உருவாகியுள்ள விழிப்புணர்வு பாடல் 22 மொழிகளில் வெளியாகவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலைப் பாதுகாப்புக் குறித்த யாத்ரா கவாச் எனும் நிகழ்ச்சியில் இன்று (மே 28) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக்கொண்டார்.
அப்போது, பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனின் இசையில் சாலை விழிப்புணர்வுக் குறித்த பாடல் ஒன்று 22 மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலை அனைவரும் தங்களது சமூக ஊடகங்களில் பகிர்ந்து சாலைப் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமெனவும் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,80,000 சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் அதில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 1,88,000 பேர் பலியாவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கிரீஸ் வெளியுறவுத் துறையுடன் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!