சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
நான் இதற்கு பொருத்தமானவன் இல்லை: மணிரத்னம்
கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதனையொட்டி இயக்குநர் மணிரத்னம் பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் பேசும்போது ஆயுத எழுத்து திரைப்படம் குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது:
இந்தப் படத்தில் வரும் கதைகளை தனித்தனியாக 3 படங்களாக எடுக்கலாம். அந்த அளவுக்கு அதில் கதை இருக்கிறது. இதை தனித்தனியாக எடுத்து ஒரு யுனிவர்ஸாக மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.
ஒரு படம் எடுக்கவே கடினமாக இருக்கிறது. இதில் யுனிவர்ஸ் படங்களை எப்படி எடுப்பது? அதற்கெல்லாம் நான் பொருத்தமானவன் இல்லை. லோகேஷ் கனகராஜ்தான் சரி.
காதல் படங்களையும் எடுப்பேன் எனத் தெரியவில்லை. இந்தக் காலத்தில் என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. யாராவது அதைப் புரிந்து நன்றாக எடுப்பார்கள் என ஜாலியாகக் கூறினார்.
எல்சியூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) என்பதை தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தி அசத்தியவர் லோகேஷ் கனகராஜ்.
இதற்கு முன்னதாக ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படத்தினை குமாரராஜா எடுத்தாலும் கமர்ஷியல் ரீதியாக முழுக்க முழுக்க ஒரு யுனிவர்ஸை லோகேஷ் கனகராஜ் எடுத்துதான் கவனம் பெற்றது.
2004-இல் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படம் 3 நாயகர்களை சுற்றி சுழலும் கதை. அவர்கள் ஓரிடத்தில் சந்திக்கும்போது என்னாகுமென எடுக்கப்பட்டது.
நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் யுனிவர்ஸ் படங்களை எடுக்க மாட்டேன் என மணிரத்னம் கூறியுள்ளார்.
லோகேஷ் தற்போது கூலி படத்தை இயக்கிவருகிறார். எல்சியூவில் கைதி, விக்ரம், லியோ திரைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.