தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு
டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர்.
இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்வுப்பூர்வமான நகைச்சுவை பாணியில் கூறியிருந்தனர்.
இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள்.
இந்தத் திரைப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டதுடன் இரவுக் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது.
இந்தப் படம் ஜப்பானிலும் வெளியானது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், இந்தப் படம் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Mark your date to welcome the most loved family on June 2nd ❤️ #TouristFamily streaming from June 2 on #JioHotstar@abishanjeevinth @RSeanRoldanmusical @sasikumardir@SimranbaggaOffc@Foxy_here03@barathvikraman@Yuvrajganesan@mageshraj@MithunJS5@iYogiBabu @dirbucks… pic.twitter.com/Yy3EvS5NJZ
— JioHotstar Tamil (@JioHotstartam) May 27, 2025