செய்திகள் :

மெட்ராஸ் மேட்னி டிரைலர்!

post image

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “மெட்ராஸ் மேட்னி”.

இந்தப் படத்தின் கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரில் மே 23 ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களினால் அந்த வெளியீடானது தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜூன் 6 ஆம் தேதியன்று ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சென்னையில் வாழும் நடுத்தர வர்க்க மனிதர்களின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

கிரீன் ஸ்கிரீனில் படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன்: கார்த்திக் சுப்புராஜ்

கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ. 1000 கோடியில் ஒரு படம் எடுப்பதை விட அந்தத்தொகையில், 20 அல்லது 30 படங்களை இயக்குவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். கிரீன்... மேலும் பார்க்க

மறக்கமுடியாத, மகத்தான கற்றல் அனுபவம்: சூரி

மாமன் படத்தில் நடிகர் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி மறக்க முடியாத, மகத்தான கற்றல் அனுபவம் எனக் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறியிருக்கும் சூரியின் நடிப்பில் சமீபத்தில்... மேலும் பார்க்க

மொழி விவகாரம்: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்!

தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார். கேரளத்தில் தக் லைஃப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டப... மேலும் பார்க்க

ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன்..!

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் உடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்ததுள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2, சலார் ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்ப... மேலும் பார்க்க

சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!

சங்கர் மகாதேவன் இசையில் உருவாகியுள்ள விழிப்புணர்வு பாடல் 22 மொழிகளில் வெளியாகவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைப் பாதுகாப்புக் குறித்த யாத்ரா கவாச் எனும் நிகழ்ச்சியில் இன்று... மேலும் பார்க்க