பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...
அத்தியாயம் முடிந்தது..! ரொனால்டோவின் பதிவினால் ரசிகர்கள் சோகம்!
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி புரோ லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடி வருகிறார்.
அல்-நசீர் அணி அல் ஃபடெக் உடன் 2-3 என தோல்வியுற்றது. சௌதி லீக்கில் இந்தப் போட்டிதான் ரொனால்டோவின் கடைசி போட்டி எனக் கூறப்படுகிறது.
அல்-நசீர் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 99 கோல்கள் அடித்துள்ளார்.
ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் தகுதிபெறாமல் அல்-நசீர் அணி வெளியேறியதால் ரொனால்டோ மீது அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
40 வயதாகும் ரொனால்டோ இந்த சீசனிலும் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ரொனால்டோ கூறியது ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது.
ரொனால்டோ கூறியதாவது:
இந்த அத்தியாயம் முடிந்தது. இந்தக் கதை? இன்னும் எழுதப்படுகிறது. ரசிகர்கள் அன்புக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
உலக அளவில் அதிக கோல்கள் (936) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரொனால்டோ நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
This chapter is over.
— Cristiano Ronaldo (@Cristiano) May 26, 2025
The story? Still being written.
Grateful to all. pic.twitter.com/Vuvl5siEB3