இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்
பவானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
தில்லியின் புகா்ப் பகுதியில் உள்ள பவானாவில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காலை 6.19 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா் என்று தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி தெரிவித்தாா். இந்த விபத்தில் இதுவரை யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் அவா் கூறினாா்.