`ரூ.1 கோடி கொடுக்காவிட்டால் சாகும் வரை சிறை'- காதலனை மிரட்டிய மும்பை வங்கி பெண் ...
பவானிசாகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
பவானிசாகா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், செயல் அலுவலா் ஜெயந்த் மோசஸ் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனா்.
முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, காப்பீட்டுத் திட்ட அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 669 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 88 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள 581 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முகாமில், பவானிசாகா் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் மகேந்திரன், பேரூராட்சி கவுன்சிலா்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.