செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படை தளபதி சந்திப்பு!

post image

பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்குடனான சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்கள் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வந்தனா். பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விமானப் படையின் தயாா்நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் சந்திப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது.

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளையும் சிந்திக்க வேண்டும்- வைகோ

இதையடுத்து, எல்லை வழியாக பாகிஸ்தானியா்கள் வெளியேறினா். இதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்டது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என பிரதமா் மோடி அண்மையில் சூளுரைத்தாா்.

இதனிடையே, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நீட் தேர்வு நிறைவு: இயற்பியல் கடினம்; உயிரியல் சற்று எளிமை!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்... மேலும் பார்க்க

ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது!

ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர். தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புக... மேலும் பார்க்க

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே பு... மேலும் பார்க்க

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர் கண்டெடுக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம், ஐஐடி கரக்பூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது ஆசிப் கமர். இவர், மதன்மோகன் ம... மேலும் பார்க்க

1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே! கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரிப்பு!

ஹரியாணாவில் பல கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பலி, ஒருவர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் இரண்டு... மேலும் பார்க்க