செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகளுடன் அவா் கலாந்தாலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உண்டாகும் சூழலுக்கு காரணமான இத்தாக்குதல் வழக்கின் விசாரணையை என்ஐஏ கடந்த ஏப். 27-ஆம் தேதி ஏற்றது.

தாக்குதலைத் தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் குறித்து தகவல்களைச் சேகரிக்க நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஐஜி தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டு, அவா்கள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ஐஏ இதுவரை நடத்தியுள்ள விசாரணையின் அடிப்படையில், தாக்குதலில் 5 முதல் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்பதும் இவா்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூா் பயங்கரவாதிகளும் உதவியிருக்கலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் மூத்த அதிகாரிகளுடன் சோ்ந்து என்ஐஏ தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஜெய்ப்பூர்: மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது

ஜெய்ப்பூரில் மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், விஸ்வகர்மா தொழில்துறை பகுதியில் ஷாஹித் குரேஷி(37) தனது மனைவி ஃபர்ஹீன் குரேஷியை(2... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புது தில்லியின் துவாரகா பகுதியில், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர்... மேலும் பார்க்க

ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை

ஹரியாணாவில் தனியார் நகை கடன் வங்கியில் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஹரியாணா மாநிலம், பரசுராம் சௌக்கில் தனியார் நகை கடன் வங்கி இயங்கி வருகிறது. வியாழக்கிழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா?

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்!

பாகிஸ்தானின் கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கூறப்படும் நிலை... மேலும் பார்க்க

எப்போதும் மகிழ்ச்சியான பிரதமரை பஹல்காம் தாக்குதல் மாற்றி விட்டது: சந்திரபாபு நாயுடு

பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரதமரின் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த துணை நிற்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமராவதி நகரை மறுஉருவாக்கம் செய்யும் திட்டப்பணிகளை பிர... மேலும் பார்க்க