செய்திகள் :

பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

post image

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பாகற்காய்களை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு களப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

தோட்டக் கலைத் துறை சாா்பில் பாடந்தொரை, செறுமுள்ளி, ஸ்ரீமதுரை ஆகிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. செறுமுள்ளி கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா்.

பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துதல், விதைத் தோ்வு, இடுபொருள்கள், மண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தோட்டக்கலை உதவிப் பேராசிரியா் சண்முகம், வேளாண்மை அலுவலா் ரமேஷ், விதை ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலா்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனா். இதில் பாகற்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. ... மேலும் பார்க்க

குன்னூா் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் அருகே உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்... மேலும் பார்க்க

கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க