பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆயுதமேந்திய போராளிகள் பதுங்கியிருந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஆப்கானிய குடிமக்கள்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தில்லியில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம், 2 பேர் பலி
மீதமுள்ள பயங்கரவாதிகளை அகற்றுவதற்காக அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர் என்று தெரிவித்தார்.
இருப்பினும் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் நடந்த சண்டை குறித்து ராணுவத் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.