செய்திகள் :

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்! ஏன்?

post image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனடாவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷாஜீப் கான் என்பவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி செய்ய முயற்சித்ததாகவும், அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஷாஜீப் கானை நாடு கடத்தியிருப்பதாக அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஷ் படேல் வெளியிட்ட பதிவில்,

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி வழங்க முயன்றதற்காகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் குற்றச்சாட்டப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் ஷாஜீப் கான், அமெரிக்காவுக்கு இன்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு நாளாக அக்டோபர் 7, 2024 அன்று, கனடாவில் இருந்து நியூ யார்க்கிற்கு வந்து புரூக்ளினில் உள்ள யூத மையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக மிகப்பெரிய துப்பாக்கிச் சூட்டை ஷாஹீப் நடத்த திட்டமிட்டார்.

அதிர்ஷடவசமாக அந்த திட்டத்தை எஃப்பிஐ முறியடித்தது. மேலும், செப்டம்பர் 4, 2024 அன்று கனடா காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டு நீதியை எதிர்கொள்வார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இருந்து அழைத்துவரப்படும் முகமது ஷாஜீப் கான் (20), ஜூன் 11 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மாா்க் - கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்

குலுக்கல் முறையில் பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சோ்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ரா... மேலும் பார்க்க

பிரிட்டன் - ‘ராஜ’ ரயில் சேவை நிறுத்தம்

பிரிட்டனில் 1869 முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசா் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா்.அரசி விக்டோரியாவின் பயணத்துக்காக சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத்... மேலும் பார்க்க

ஈரான் - ‘அணுசக்தி பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு’

அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவாா்த்துக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து ஈரான் அரசின் செய்தித்தொடா்பாளா் ஃபடேமே மொஹஜிரானி (படம்) கூறுகையில், ‘ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும்... மேலும் பார்க்க

ஸ்பெயின் - 100 ஆண்டுகள் காணாத வெப்பம்

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூலை மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ... மேலும் பார்க்க

தொலைபேசி உரையாடல் கசிவு எதிரொலி: தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ரா இடைநீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: சேதங்களை மதிப்பீடு செய்த ஈரான்!

ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவ... மேலும் பார்க்க