செய்திகள் :

பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - காரணம் என்ன?

post image

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, 'நோபல் பரிசு ஆசை' ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம்.

பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று!

இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்.

அதன் பிறகு, வெள்ளை மாளிகையில் இருந்து அடிக்கடி, 'ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர வேண்டும்' என்கிற கோரிக்கை எழுந்துக்கொண்டே வருகிறது.

முதன்முதலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியிருந்தார்.

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு

நெதன்யாகு

கடந்த மாதம், அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக அவர் முன்னே சொன்னார்.

மேலும், அவர் பரிந்துரைத்ததற்கான நகலையும் ட்ரம்பிற்கு பரிசாக அளித்தார்.

கம்போடியா பிரதமர்

இந்த வரிசையில், மூன்றாவதாக, கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட்டும் ட்ரம்பை தற்போது நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த கம்போடியா - தாய்லாந்து போரை நிறுத்தியதற்காக, ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், அந்தப் பரிந்துரைக்கான கடிதத்தின் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்தப் பரிந்துரைகள் ட்ரம்ப் கைகளில் நோபல் பரிசைச் சேர்க்குமா?

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்க... மேலும் பார்க்க

"முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?" - அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?

பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழ... மேலும் பார்க்க

`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?’ - சீமான் காட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒ... மேலும் பார்க்க

J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வர... மேலும் பார்க்க

`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க