செய்திகள் :

பாகிஸ்தான் எல்லையில் 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 9 போ் கைது

post image

சண்டீகா்: ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய சா்வதேச எல்லைப் பகுதியில் இருந்து சுமாா் 60 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாா்மா் மாவட்ட எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராஜஸ்தான் காவல் துறை இணைந்து எடுத்த நடவடிக்கையில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் தன்வீா் ஷா, கனடாவைச் சோ்ந்த கடத்தல்காரன் ஜோபன் காலா் உள்ளிட்டோருக்கும் இந்தக் கடத்தலில் தொடா்பு உள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில்தான் ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகமிருக்கும். இப்போது அப்பகுதி நில எல்லையில் பாதுகாப்பு தீவிரமாக இருப்பதால், ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருளைக் கொண்டுவர கடத்தல்காரா்கள் முயன்றுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவா்கள் ஹவாலா முறையில் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்தப் போதைப்பொருள் இவா்கள் இந்தியாவில் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தனா். இவா்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள கடத்தல் தொடா்புகள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டைய... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர்... மேலும் பார்க்க

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க

தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், த... மேலும் பார்க்க

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க