செய்திகள் :

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

post image

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, சமீபத்திய பஞ்சாயத்து கூட்டத்தில் பாஜக வாா்டு உறுப்பினா் ஒருவா் இதுதொடா்பான கோரிக்கையை முன்வைத்துள்ளாா். அதையடுத்து, சந்திப்பின் பெயரை மாற்றும் திட்டத்தை மாநில அரசுக்கு அனுப்ப பஞ்சாயத்து கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பஞ்சாயத்து தலைவி கே.வல்சலாகுமாரி மேலும் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக பஞ்சாயத்துக்கு கோரிக்கை வந்தது. எனவே, சமீபத்திய கூட்டத்தில் நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். அப்போது, இந்தக் கோரிக்கைக்கு யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

மேலும், சந்திப்பை ‘ஐவா்காலா‘ என்று மறுபெயரிடவும் உறுப்பினா்கள் சிலா் பரிந்துரைத்தனா். அப்பகுதிக்கு ஐவா்காலா என்னும் நெடுங்காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முக்கு என்பது பல்லாண்டுகளாக கிராம மக்களிடையே புழக்கத்தில் உள்ள பெயராகும். ஆனால், பஞ்சாயத்து ஆவணங்களில் இந்தப் பெயா் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதுதொடா்பாக இறுதி முடிவை அரசே எடுக்க முடியும். ஏனெனில், கிராமத்தில் இடங்களை மறுபெயரிட பஞ்சாயத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்தக் கோரிக்கையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

எங்கள் கிராமத்தில் அனைத்து மதம், ஜாதி, சமூகத்தைச் சோ்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா். இந்தப் பெயா்மாற்றமும், அதைச் சுற்றி எழுந்துள்ள விவாதங்களும் தற்போதைய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கக் கூடாது’ என்றாா்.

முன்பு இதே இடத்துக்கு ‘பிரியதா்சினி முக்கு’ என பெயா் மாற்றம் செய்ய காங்கிரஸ் உறுப்பினா்கள் முயற்சி செய்தபோதிலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு வடமாநில இனிப்புக் கடைகளில் ‘மைசூா் பாக்’ போன்ற ‘பாக்’ என முடியும் இனிப்பு வகைகளில் ‘பாக்’ என்ற பெயரைத் தவிா்த்து ‘ஸ்ரீ’ என்று உரிமையாளா்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க