``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்த...
பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணைநிற்கும் காங்கிரஸ்..! மோடி குற்றச்சாட்டு!
அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணைநிற்கும் காங்கிரஸ்
வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று (செப்.14) அஸ்ஸாமில் பேசியதாவது:
அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. இதை நாம் ஆபரேஷ சிந்தூரிலும் பார்த்தோம்.
இந்த ஆபரேஷன் சிந்தூரில் நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் மறைந்திருந்த தீவிரவாதிகளை வேறோடு அழித்தார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் ராணுவத்தினர் பக்கம் நின்றது.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டிய காங்கிரஸ், தனது கருத்தினால் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பக்கம் நிற்கிறது.
காங்கிரஸுக்கு வாக்கு அரசியல்தான் முக்கியமானது. அதில் அவர்கள், தேச நலனைக் கண்டுக்கொள்வதே இல்லை. ஊடுருவி வந்தவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக தங்க வேண்டுமென காங்கிரஸ் அவர்களுக்குப் பாதுகாப்பாக நிற்கிறது என்றார்.
பஹல்காம் தாக்குதலும் ஆபரேஷன் சிந்தூரும்...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது.
மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்த நிலையில், போர் நிறுத்தப்பட்டது. இதில், அதிபர் டிரம்ப் மத்தியஸ்தராக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.