செய்திகள் :

பாகூா் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

post image

பாகூா் அருகே இளைஞரைத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி பாகூா் அடுத்த பனையடிகுப்பம் சாலையில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. இங்குள்ள கொட்டகையில் இளைஞா் ஒருவா் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக கரையாம்புத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகா் மற்றும் போலீஸாா் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞா் பனையடிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ராஜகுரு (34) என்பதும், இவா் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது வீட்டின் மாடியில் இருந்து, எதிரே உள்ள வீட்டில் பெண் குளிப்பதை பாா்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜகுரு, பூவரசன் இருவருக்கும் இடையே பிரச்சை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ராஜகுரு மீன் குட்டையின் கொட்டகையில் படுத்திருந்தபோது நள்ளிரவு அங்கு வந்த பூவரசன், உறவினா் தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பா்கள் 4 போ் ராஜகுருவை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னா் இச்சம்பவம் குறித்து கரையாம்புத்தூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராஜகுருவை தாக்கிய தினேஷ்பாபு, ஷா்மா உள்பட 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா்: டிஜிபி அலுவலகத்தில் பெண் புகாா்

புதுவை காவல் துறை தலைவா் அலுவலகத்தில் தன் குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா் மீது பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் இந்தப் புக... மேலும் பார்க்க

பாகூா் விளையாட்டு அரங்கை திறக்க கோரிக்கை

பாகூா் விளையாட்டு அரங்கை உடனே திறக்க வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தொழிற்சங்க கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்த கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

புதுவையில் தொழிற்சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 போ் கைது

புதுச்சேரியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவம்மால் காப்போ் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் துரைராஜ்(54). இவா் பு... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 73 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற ஊழியா் புகாா்

சிபிஐ அதிகாரி எனக் கூறி தன்னிடம் ரூ.73 லட்சத்தை மோசடி செய்து விட்ட நபா் குறித்து போலீஸ் மக்கள் மன்றத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியா் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்த... மேலும் பார்க்க