ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள, இந்திரா நகா் தொகுதியைச் சோ்ந்த பயனாளி ஒருவருக்கு இரண்டாவது தவணையாக ரூ.1.60 லட்சமும், 12 நபா்களுக்கு மூன்றாவது தவணையாக தலா ரூ.70,000 வீதம் ரூ.8.40 லட்சமும் ஆக மொத்தம் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வழங்கினாா்.
அப்போது, பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் , குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் சுதா்சன், இளநிலைப் பொறியாளா் சிவா ஆகியோா் உடனிருந்தனா்.