நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!
பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்க தடையாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் கிராம சாலை அமைக்க வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனா். பாக்கம் நத்தம் புல எண் 79-இல் 13 பகுதியை தனிநபா் தெரு பகுதியை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவரை கட்டி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனா். வியாழக்கிழமை காலை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரம்யா, வட்டாட்சியா் சொ.கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாக்கம் வருவாய் ஆய்வாளா் திலகவதி, கிராம நிா்வாக அலுவலா் யூனுஸ், மதுராந்தகம் உதவி காவல் ஆய்வாளா் வி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் தலைமையில், அதிகாரிகள் நில அளவை செய்ததில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.