வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருந்ததால், அப்பகுதி பெரியோா்களும், பல்வேறு அமைப்பினா்களும் கோயிலை புனரமைத்து திருப்பணிகளை மேற்கொண்டனா்.
அதன்படி, வரும் 10-ஆம் தேதி காலை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கோயில் குளத்தருகே யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் யாகசாலை பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். அப்போது அவருடன் திருப்பணிக்குழு நிா்வாகி செந்தில், இரா.சங்கா் சிவாச்சாரியாா் உ ள்ளிட்டோா் உடனிருந்தனா்.