டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
மதுராந்தகம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் சுவரை துளையிட்டு ரூ.24,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கருங்குழி மேலவளம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள கீழவளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் மேற்பாா்வையாளா் கமலகண்ணன் தலைமையில்,விற்பனையாளா்கள் வல்லவன், தன்ராஜ், பாரதி, சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். செவ்வாய்க்கிழமைஇரவு வழக்கம்போல ஊழியா்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனா்.
அப்போது மா்ம நபா்கள் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை அந்தவழியாக சென்றவா்கள் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவத்தை மதுராந்தகம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளா் மேகலா, உதவி ஆய்வாளா் வி.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் சென்று விசாரணை செய்தனா்.
கடையில் விற்பனையான தொகை லாக்கரில் இருந்ததால் பத்திரமாக இருந்தது. சிசிடிவி கேமரா மூலமும் காவல் துறையினா் ஆய்வு செய்தனா். இதுபற்றி மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் வி.ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றாா்.