செய்திகள் :

பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கும் பும்ரா, ஜடேஜா!

post image

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்க இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா காத்திருக்கிறார்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி (நாளை) தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

பும்ரா 200

பாக்ஸிங் டே டெஸ்டில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் 200 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 12-வது இந்திய பந்துவீச்சாளர் ஆவார் பும்ரா.

இதுவரை 43 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 19.52 சராசரியுடன் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்துவீச்சு 27/6. அதிகபட்சமாக ஒரு போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் பார்டர் - காவஸ்கர் தொடரில், மூன்று போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் பும்ரா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 போட்டிகளில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.

இதையும் படிக்க : 2024 - 'தி கிரேட்டஸ்ட்' ஸ்டீவ் ஸ்மித்தின் புத்துயிர்ப்பு!

ஜடேஜா 600

இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய 5-வது இந்திய பந்துவீச்சாளர் ஆவார் ஜடேஜா.

இதுவரை 349 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 593 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 17 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சு 42/7.

இந்த தொடரில் ஒரு விக்கெட்கூட ஜடேஜா வீழ்த்தவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

நால்வர் அரைசதம்: முதல்நாள் முடிவில் 300 ரன்களை கடந்த ஆஸி.

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 311 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுஷேன் 72 ரன்கள் குவித்தார். 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன... மேலும் பார்க்க

தாயின் அறிவுரையால் சுழல் பந்துவீச்சாளராக மாறிய அஸ்வின்..!

ஓய்வை அறிவித்த பிறகு அஸ்வின் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் தனது சுழல்பந்து வீச்சுகு காரணம் அவரது அம்மா எனக் கூறியுள்ளார். அதில் அஸ்வின் பேசியதாவது: நானும் அப்பாவும் உழைக்க அ... மேலும் பார்க்க

பும்ராவின் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர்..! சாதனை படைத்த இளம் வீரர்!

பும்ரா ஓவரில் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர் அடித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டி மொல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் பும்ராவின் ஒரே ஓவரி... மேலும் பார்க்க

ஆஸி. இளம் வீரருடம் வம்பிழுத்த கோலி..! தடைசெய்யப்படுவாரா?

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் இந்திய வீரர் விராட் கோலி வம்பிழுத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திர... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்!

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றனர்.மெல்போா்ன் நகரில் இன்று அதிகாலை(இந்த... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான திட்டமிடலில் தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம்பெறுமென கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தகுதிபெற... மேலும் பார்க்க